Tuesday, July 3, 2012

ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் பொருளாதார உதவி - ஜீ.எல். பீரிஸிடம் உறுதி!

Tuesday, July 03, 2012
இலங்கை::முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து இலங்கையில் மீண்டும் மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் இவ்வேளையில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை கண்காணித்து வரும் ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் இந்த நற்பணியை மேற்கொள்வதற்கு பெரும் பங்களிப்பையும், நிதியுதவியையும் வழங்க தயாராக இருக்கின்றது என்று ஜப்பானின் வெளி விவகார அமைச்சர் கொய்ச்சீரோ கெம்பா நேற்று டோக்கியோ நகரில் அறிவித்தார்.

ஜப்பான் சென்றிருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ¤டன் பரஸ்பர நல்லுறவு தொடர்பாக மேற்கொண்ட பேச்சுவார்த்தை யின் போதே ஜப்பானிய அமைச்சர் தங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இலங்கையில் பொருளாதார மறுமலர்ச் சியை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கப்பாட்டு செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஜப்பான் தயாராக இருக்கின்ற தென்று அவர் கூறினார்.

ஜப்பானுடன் இலங்கை ராஜதந்திர உறவை ஏற்படுத்திய அறுபது ஆண்டுகாலத் தில் ஜப்பான் இலங்கைக்கு பல்வேறு விதமான உதவிகளை வழங்கி இருக்கிற தென்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நன்றி தெரிவித்தார்.

உல்லாசப் பயணத்துறை கடந்த ஆண் டில் ஜப்பானின் முழுமையான பங்களிப்பு டன் 45 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்று தெரிவித்த ஜப்பானிய அமைச்சர், கடல் பாதுகாப்பு, சூரிய சக்தி திட்டங்கள் மற்றும் ஒலி, ஒளிபரப்புத் துறையில் டிஜிடல் முறையை அறிமுகம் செய்வதிலும் இப்போது சிறந்த இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். டோஹோகூ நகரில் நடைபெறும் அனர்த்த குறைப்பு மற்றும் முகாமைத்துவ சர்வதேச மகாநாட் டில் பிரதான உரையாற்று வதற்கு இணக்கம் தெரிவித்தமைக்காக ஜப்பானிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ¤க்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதுவர் இளைப்பாறிய கடற்படைத் தளபதி வசந்த கருனாகொடவும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment