Monday, June, 18, 2012இலங்கை::தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த விளக்கமறியல் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் சந்தேகநபர்கள் இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதேசவாசிகள் சந்தேகநபர்களை மடக்கிப் பிடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது மயக்கமுற்ற இரண்டு சந்தேகநபர்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று மாலை உயிரிழந்ததாகவும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment