Wednesday, 20th of June 2012இலங்கை::லெபனானின் அமைதிகாக்கும் பணிகளுக்காக 150 இராணுவ வீரர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிடுகின்றது.
இந்தக் குழுவில் 10 உத்தியோகத்தர்கள் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, ஹெய்ட்டியின் அமைதிகாக்கும் பணிகளுக்கு 7 உத்தியோகத்தர்களும், 111 இராணுவத்தினரும் அடுத்தமாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment