Wednesday, June 20, 2012

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தூதுவர்கள் முக்கிய செயலமர்வு ஒன்றை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது!

Wednesday, 20th of June 2012
இலங்கை::வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தூதுவர்கள் மற்றும் முக்கிய இராஜதந்திரிகளை முக்கிய செயலமர்வு ஒன்றை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான புதிய திருப்பங்கள் குறித்து விளக்கமளிக்கவே இலங்கையின் தூதுவர்கள் மற்றும் முக்கிய இராஜதந்திரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நான்கு நாட்கள் இவர்களுக்கு தியத்தலாவ, கிளிநொச்சி மற்றும் கொழும்பில் சிறப்பு செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இந்தச் செயலமர்வில் ஜனாதிபதி மஹகிந்த ராஜபக்ஷ, வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கை தூதுவர்களுக்கு, வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment