Saturday, June, 02, 2012இலங்கை:: புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் பொய் பிரசாரங்களுக்கு, பதிலளிக்கும் வகையில், இலங்கைக்கான தமிழர்கள் என்ற அமைப்பை ஆரம்பிக்க, புலிகளுக்கு எதிரான தமிழர்கள் தீர்மானித்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை மையமாக கொண்டு இந்த அமைப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.புலிகளின் சகல தடைகளை மீறி இந்த அமைப்பை உருவாக்க உள்ளதாக அதன் செயற்பாட்டாளர்களில் ஒருவரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். புலிகளினால் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளின் புதல்வர்கள் சிலர் இந்த அமைப்பில் வங்கம் வகிக்க உள்ளனர். தமது அமைப்பை அவுஸ்திரேலியா வரை விஸ்தரிக்க உள்ளதாகவும் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment