Saturday, June, 02, 2012இலங்கை::சிங்கப்பூரின் டைகர் எயார்வேஸ் வானூர்தி சேவை கொழும்புக்கான தமது நேரடி வானூர்தி சேவையை நேற்று ஆரம்பித்துள்ளது.
ரி.ஆர்.2572 இலக்க வானூர்தி இந்த சேவையின் முதல் கட்டமான நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் கொழும்பை வந்தடைந்தது.
இது கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மிகக் குறைந்த செலவைக் கொண்ட வானூர்தி சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைகர் எயார்வேஸ் தமது வாடிக்கையாளர்களுக்கு முறையான பயண அனுபவத்தை வழங்கும் என அதன் நிர்வாகத்தின் குறிப்பிட்டுள்ளனர்.
தெற்காசிய வலயத்தில் தொலைத்தொடர்பு மற்றும் பிணைப்புகளை மேற்கொள்வதை நோக்காக கொண்டே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் வர்த்தக இயக்குனர் டேவ் பெர்ரிங் தெரிவித்துள்ளார்..
இதற்கான ஒருவழிப்பயண கட்டணமாக 98 அமெரிக்க டொலர்கள் அல்லது 8 ஆயிரத்து 600 ரூபாவாகவும் அறவிப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
டைகர் எயார்வேசின் சேவைகள் வாரத்தில் மூன்று தினங்கள் இடம்பெறும்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 12 நாடுகளுக்கான சேவைகளை இந்த வானூர்தி சேவை முன்னெடுத்து வருகின்றது..
No comments:
Post a Comment