Sunday, June 10, 2012

யுத்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்ளாள் புலி போரளிகள் - சந்திரசிறி கஜதீர சந்திப்பு!

Sunday, June, 10, 2012
இலங்கை::யுத்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்ளாள் புலிபோராளிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக மேற்படி முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் புலிபோராளிகளுக்கும் அமைச்சருக்குமிடையில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் முன்னாள் புலிபோராளிகளின் சமூக ரீதியில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அவர்களின் பொருளாதார வளங்கள் மற்றும் தொழில் ரீதியில் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் கஜதீர கேட்டறிந்து கொண்டார்.

முன்ளாள் புலிபோராளிகள் தங்களின் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் உதவி திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் ஆகியன எதிர்வரும் காலங்களில் வழங்கப்படவுள்ளது என அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

No comments:

Post a Comment