Sunday, June 10, 2012

டுபாயிலிருந்து பயணித்த விமானம் ஒன்றில் மது போதையில் தகராறு செய்த நபர் கைது!

Sunday, June, 10, 2012
இலங்கை::டுபாயிலிருந்து பயணித்த விமானம் ஒன்றில் மது போதையில், ஏனைய பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்படு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட அதேவேளை விமானத்தில் இருந்த கமராவையும் சேதப்படுத்தியுள்ளார்.

இவரை விமான நிலைய அதிகாரிகள் கட்டுநாயக்கா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்துக் கோயில் குருக்கள் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சந்தேக நபர்கள் இருவர் கைது!



இறக்குவானை இந்துக் கோயில் குருக்கள் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நபர்கள், குருக்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்ததோடு, இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் தரும்படி வற்புறுத்தி பெற்றுக் கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இறக்குவானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்தனர்.

இந்த குருக்களிடமிருந்து 30 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற முயன்றுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ்ச்சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் 23 வயதுடைய இளைஞன் ஒருவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பெல்மடுள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment