Wednesday,June,13,2012இலங்கை::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட 33 பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்துவது குறித்து சிறப்பு செயலணி கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு இன்று (13) கருத்து வெளியிட்ட போதே லலித் வீரதுங்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 135 பரிந்துரைகளில் 33 பரிந்துரைகள் தேசிய ரீதியில் செயல்படுத்தப்பட வேண்டியவை என LLRC சிறப்பு செயலணியின் தலைவரான ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கூறியுள்ளார்.
சில பரிந்துரைகள் இந்த வருடத்தில் செயற்படுத்தப்படும் எனவும் ஏனையவை அடுத்து வருடமே செயற்படுத்தப்படும் எனவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
லலித் வீரதுங்க தலைமையிலான சிறப்பு செயலணி இதுவரை ஐந்து தடவைகள் கூடியுள்ளதுடன் அதன் செயற்திட்ட அறிக்கை மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்துவது குறித்த இரகசிய செயற்திட்டத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டனிடம் கையளித்ததாக வெளியான செய்தியை லலித் வீரதுங்க மறுத்துள்ளார்.
சில பரிந்துரைகளை செயற்படுத்துவதில் சிக்கல் காணப்படுவதை இலங்கை அமெரிக்காவிற்கு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment