Thursday, June, 21, 2012இலங்கை:: பெந்தோட்டையில் ஜெர்மனியப் பிரஜை ஒருவர் 170 கிராம் வரையிலான கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் கைதுசெய்யப்படும்போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருக்கவில்லை எனவும் பொலிஸார் கூறினார்.
இந்த சந்தேக நபர் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நகை அடகு பிடித்து பணம் வழங்கி தலைமறைவான போலி ஆசாமி ஒருவரைத் தடுப்புக்காவல்!
முஸ்லிம்கள் வட்டி எடுப்பது பாவம்;’ எனக் கூறி வட்டியில்லாமல் நகை அடகு பிடித்து பணம் வழங்கி தலைமறைவான போலி ஆசாமி ஒருவரைத் தடுப்புக்காவலில் வைக்கும் படி நேற்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்திலுள்ள சுமார் 25 குடும்பங்களின் பல்வேறு தங்க நகைகளைப் பிணையாகப் பெற்று அவற்றிற்கு பணம் வழங்கிய பீ.எம்.ஹம்ஸா என்ற இந்நபர் பின்னர் அந்நகைகளை வேறு வங்கிகளில் அடகு வைத்து கூடுதல் பணம் பெற்று நீர்கொழும்புப் பகுதியில் தலைமறைவாய் இருந்தபோது பொலிஸார் கைது செய்தனர்.
இவரால் சுமார் ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment