Thursday, June, 21, 2012இலங்கை::சிங்கள மந்திரியின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்: (புலி வால்) தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
சென்னை::விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் (புலி வால்)தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14-வது தேசிய மாநாட்டில், "வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்'' எனப் பேசியிருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிங்கள மந்திரி சம்பிக ரணவாகா, இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்'' என்று ஆணவத்தோடு கொக்கரித்திருக்கிறார்.
இவ்வாறு பேசிய சிங்கள மந்திரி சாம்பிகா ரணவாகாவை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டும் வகையில் இவ்வாறு பேசியிருக்கிற அந்த மந்திரியை இந்திய அரசும், தமிழக அரசும் மிக வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அந்த மந்திரியின் ஆணவமான பேச்சைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் அறவழியிலான ஆர்ப்பாட்டங்களை ஆங்காங்கே நடத்திட வேண்டும்.
இவ்வாறு (புலி வால் பரதேசி)தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment