Sunday,3rd of June 2012இலங்கை::மட்டக்களப்பில் யுத்தத்தின் பின் ஆய்வு செய்த பெண் வன்முறை தடுப்பு வழிகளை அமுல் நடாத்த விஷேட மாவட்ட செயலணி அரசாங்க அதிபர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றி செய்யப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளில் அமுலாக்கப்படவேண்டிய வன்முறை தடுப்பு திட்டங்களை அமுல்படுத்த மாவட்ட மட்டத்திலான விஷேட செயலணியொன்று அரசாங்க அதிபர் திருமதி.பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொண்டர் அமைப்பான ஒக்ஸ்பாம் பெரிய பிரித்தானியா நிறுவனம் இந்த விஷேட ஆய்வினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் அனுசரனையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதி உதவி திட்டத்தில் செய்து முடித்துள்ளது இந்த ஆய்வறிக்கை மாவட்டசெயலகத்தில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது ஆய்வில் கண்டறியப்பட்ட பிரதானமான பெண் வன்முறைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் இனம் காணப்பட்டன.
இதில் மதுபான பாவனையாலேயே அதிக பெண் வன்முறை இடம்பெறுவதாகவும் ஏனைய சமூக பொருளாதார பிரச்சினைகளும் வன்முறைக்கு வழிகோலுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கான வன்முறைகளை தடுக்க அரச, அரசசார்பற்ற பல நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் செயல்படுகின்ற போதிலும் அதன் பயனை அடைய பாதிக்கப்பட்ட பெண்கள் இந்நிறுவனங்களை நாடுவது குறைவெனவும் இந்த விஷேட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கமைய மாவட்டத்தில் செயல்படும் சகல பெண்களுக்கெதிரானவன்முறைகளை தடுக்கச் செயல்படும் பொருட்டு அமைப்புக்கள்ஒருமித்து செயல்படுவதன்மூலமே இதன் முழுப்பயனையும்அடைய முடியுமெனவம் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர்திருமதி.பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் இவ் விசேட மாவட்ட செயலணி நிறுவப்பட்டது. இந்த விஷேடசெயலணியில் சுகாதார ‘கல்வி ‘சமூகசேவை திணைக்கள அதிகாரிகள் சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டர் அமைப்புக்களின்பிரதிநிதிகள் ‘பிரதேசசெயலாளர்கள் உள்ளடுக்கப்படுவதாக மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தகவல் அதிகாரி பி.ரி.அப்துல்லத்தீப் தெரிவித்தார்.
இன்றைய ஆய்வு அறிக்கை சமர்பிக்கும் விஷேட கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல்பணிப்பாளர் ஆர்.நெடுஞ்சழியன் ஒக்ஸ்பாம் அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட கிழக்குமாகாண இணைப்பாளர் ஆர்.ரகுராமமூர்த்தி மற்றும் வைத்திய நிபுணர்கள் பெண்கள் நல அமைப்பின்பிரதிநிதிகள் ‘பிரதேசசெயலாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:
Post a Comment