Sunday 3rd of June 2012இலங்கை::நிரந்தர சமாதானத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரெங்கின் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி முடிசூரி 60 வருட நிறைவை ஒட்டி கொழும்பில் 'வெஸ்மின்ஸ்டர் இல்லத்தில்" இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தவிர இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வரலாற்று ரீதியாகவும், சரித்திர முக்கியத்துவம், கலாசாரம் போன்ற வற்றுடன் ஆழமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் அபிவிருத்தி நடடிவக்கைகளுக்காகவும் பிரித்தானியா கனிசமான அளவு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
No comments:
Post a Comment