Tuesday, June 26, 2012

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் ரொரன்டோ விமான நிலையத்தில் கைது

Tuesday, June 26, 2012
ரொரன்டோ::சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவரை கனேடிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரொரன்டோ விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

492 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டின் பேரிலேயே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடராஜா மகேந்திரன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2010ம் ஆண்டு சன் சீ கப்பலின் மூலம் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்கு கடத்தியதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவராக மகேந்திரன் திகழ்கின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் நான்கு பேர் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது...

கனடாவின் குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு அறிமுகம் செய்துள்ளது!

கனடாவின் குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்ற அகதிகள், நிரந்தர வாழ்விட உரிமை பெற்றவர்கள் மற்றும் விருந்தினர்களை எளிதாக நாடு கடத்த முடியும்.

மேலும் இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது.

இதுதவிர கனடாவுக்குள் அனுமதிக்கப்பட முடியாதவர்கள், நாட்டின் நலனுக்கு எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்று கருதினால் அமைச்சர்கள் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment