Tuesday, June 26, 2012

அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக தமிழினி விடுதலை செய்யப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை -பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Tuesday, June 26, 2012
இலங்கை::அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக தமிழினி விடுதலை செய்யப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் இலங்கை அரசு தனது வெளிப்படைத் தன்மையை சர்வதேசத்துக்கு காட்டும் நடவடிக்கையே அது என்றும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழினிக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வை ஏனைய அரசியல் கைதிகளுக்கும் அளிக்காமல் இருக்கும் அரசின் அணுகுமுறைக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணம் என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு முரளிதரன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் முக்கிய தாக்குதல் அணிகளில் அங்கம் வகித்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் கூட புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் புலிகளுக்கு சிறு உதவிகளை செய்தவர்களும் சந்தேக நபர்களும் சிறைகளில் வாடுவது நியாயமில்லை என்றும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் முரளிதரன் ஏற்றுக் கொண்டார்.

அரசு அமைக்கவுள்ள மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் ஊடாக இந்த கைதிகளின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்...

முகாம் மக்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படுவார்கள் - விநாயகமூர்த்தி முரளிதரன்!

முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டதன் பின்னர் காலதாமதம் இன்றி உடனடியாக மீள் குடியமர்த்தப்படுவார்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment