Saturday, June 23, 2012இலங்கை::ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் 20ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைக்கு எதிரான எந்தவொரு பிரேரணையும் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
எனினும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினால் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வினா எழுப்பப்படலாம் என ஆணையாளர் கலாநிதி பிதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் 20ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது.
No comments:
Post a Comment