Saturday, June 23, 2012

உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது - இந்திய மற்றும் இலங்கை அரச தலைவர்கள்!

Saturday, June 23, 2012
நீண்டகால வரலாற்றைக்கொண்ட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என இந்திய மற்றும் இலங்கை அரச தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவரும் ரியோ+20 மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற சந்திப்பிலேயே இரு நாட்டுத் தலைவர்களும் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே காணப்படும் நீண்டகால உறவு தொடர்பில் இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு மற்றும் கிழக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 50ஆயிரம் வீட்டுத்திட்டம் மற்றும் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment