Thursday, June 28, 2012

வடக்கில் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் அரசாங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் என்ன வித்தியாசம் - ரணில் விக்ரமசிங்க!

Thursday, June 28, 2012
இலங்கை::அரசாங்கம் முதலில் தேர்தல் நடத்த வேண்டியது வட மாகாணத்துக்கே என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் அவசியமான மாகாணத்திற்கு தேர்தல் நடத்தாது அநாவசியமான மாகாணத்துக்கு தேர்தல் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விசேடமாக வடக்கில் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட தற்போது தேர்தல் ஒன்று அவசியப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற பொது எதிர்கட்சி எதிர்ப்பு அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், வடக்கில் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் அரசாங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்று வடக்கில் பிரபாகரன் செய்ததை இன்று அரசாங்கம் கேபி ஊடாக செய்து கொண்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வயிற்றில் அடிக்காது நிவாரணம் வழங்க முறையான திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment