Sunday, June 3, 2012

புலிகளுக்கு எதிரான தடை வரவேற்கப்பட வேண்டியது – அரசாங்கம்!

Sunday 3rd of June 2012
இலங்கை::புலிகளுக்கு எதிரான தடை வரவேற்கப்பட வேண்டியது என அராசங்கம் அறிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.

புலி ஆதரவாளர்கள் எவ்வாறு மீள ஒருங்கிணைந்து நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் அறிந்து கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புலி ஆதரவாளர்கள் தமிழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் இந்தியாவில் மீள ஒருங்கிணைந்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியா புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளுக்கு எதிராக இந்திய அரசாங்கத்தின் தடை வரவேற்கப்பட வேண்டியது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment