Sunday 3rd of June 2012சென்னை::கருணாநிதியின் மவுனம், நாட்டின் அரசியலை தீர்மானிக்கும்,'' என ராஜ்யசபா தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசினார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்த தின விழா, சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., மகளிர் அணி சார்பில் நேற்று நடந்தது. கருணாநிதி, ராஜாத்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கனிமொழி பேசியதாவது: ஜனாதிபதியை தேர்வு செய்வதில், கடந்த 1969ம் ஆண்டு முதல், கருணாநிதி முக்கிய பங்கு வகித்து வருகிறார். தற்போதய ஜனாதிபதி தேர்தல் குறித்து, கருணாநிதியிடம் தான் முதலில் ஆலோசனை நடத்தினர். இந்திய அரசியலை நிர்ணயிக்கக் கூடியவராக கருணாநிதி திகழ்ந்து வருகிறார். பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி, சென்னையில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், அவர் பழைய நினைவுகளை பேசிவிட்டு இரண்டு நிமிடம் மவுனமாக இருந்தார். அவரது மவுனம், காங்கிரசார் ஒரு கருத்து தெரிவிக்கவும், பா.ஜ.,வினர் ஒரு கருத்து தெரிவிக்கவும் வழி வகுத்தது. அவரது மவுனம் அல்லது ஒற்றைச் சொல் கூட, நாட்டின் அரசியலை தீர்மானிக்கக் கூடிய வகையில் அமைகிறது. இவ்வாறு கனிமொழி பேசினார்.
No comments:
Post a Comment