Tuesday, June 19, 2012

வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டாஸ் : சேலத்தில் பதற்றம்; போலீஸ் குவிப்பு!

Tuesday, June, 19, 2012
சேலம்::வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து சேலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுட்டு வருகின்றனர். சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில் கடந்த 3ம் தேதி அதிகாலையில் குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் மஹாலி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் சேலம் மாவட்ட திமுகவினரிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் மாநகர், மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு கோவைக்கு புறப்பட்ட அரசு பஸ், ஒசூரில் இருந்து சேலம் வழியாக கரூர் நோக்கி சென்ற மற்றொரு பஸ் உள்பட 10 பஸ்களின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment