Tuesday, June, 19, 2012நியூயார்க்::அமெரிக்காவை சேர்ந்த 33 வயது சாகச கலைஞர் நிக் வேலன்டா. இவர் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல் இரு முனைகளிலும் கயிறு கட்டி கடந்துள்ளார். வட அமெரிக்காவில் தொடங்கி கனடா வரை திக் திக் அடி எடுத்து வைத்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். உயிரை பணையம் வைத்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது உலக அளவில் இதுவே முதல் முறை. நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மேலே பல அடி உயரத்தில் இரு முனைகளிலும் கயிறு கட்சி இவர் நடந்த அந்த காட்சியை அமெரிக்கர்கள் கனடாவை சேர்ந்தவர்கள் கூடி நின்று மெய்சிலிர்க்க பார்த்தனர். சில நாட்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை குறித்து நிக் கூறியதாவது: என் குடும்பத்தினர் கயிற்றின் மேல் நடந்து பல சாதனை படைத்துள்ளனர். அதனால் என் குடும்பத்துக்கு Ôப்ளையிங் வாலன்டாஸ்Õ என்ற செல்ல பெயரும் உண்டு. நான் வித்தியாசமாக செய்ய நினைத்ததை விடாமுயற்சி மற்றும் கடவுள் அருளால் வெற்றிகரமாக முடித்து விட்டேன். இது எனது சாதனையின் தொடக்கம்தான். இதேபோல் மேலும் பல உலக சாதனை படைப்பதே குறிக்கோள்.
அக்ரோபாடிக் பயிற்சி, சாதனை படைக்க எனக்கு கைகொடுத்தது. அமெரிக்கா , கனடா இடையே நயாகரா நீர்வீழ்ச்சி மிகவும் ஆபத்தானது. பலரது எதிர்ப்புகளை சமாளித்தே இந்த சாதனை படைக்க தயாரானேன். இதற்காக இருநாட்டிடமும் அனுமதி பெற்றேன். பயங்கர காற்று, நீர்வீழ்ச்சியின் ஆரவாரத்துக்கு இடையே கடுமையாக போராடி அடி மேல் அடி எடுத்து வைத்தேன். இதற்காக 2 அங்குலம் தடிமனான கேபிளில் 1,800 அடி தூரத்தை 30 நிமிடங்களில் நடந்து கடந்துள்ளேன். உலகப்புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியின் 196 அடி உயரத்தில் நடந்ததை நம்ப முடியவில்லை. மேகத்தில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. சாதனையை நிறைவு செய்த போது மனிதனால் முடியாதது இந்த உலகில் எதுவுமே இல்லை என்று உணர்ந்தேன். வெற்றிக் கனியை பறித்ததும் முதன் முதலில் நான் பேசியது என் பாட்டியுடன்தான். என் சாதனை குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சாதனை படைக்க உதவிய கடவுளுக்கும், ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கும் நன்றி. இவ்வாறு நிக் கூறினார்.
No comments:
Post a Comment