Saturday, June, 09, 2012இலங்கை::புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், மயானம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ள புலிகளின் கொள்கலன் பெட்டி ஒன்றில், பெருந்தொகையான சொத்துக்கள் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த ரகசியத்தை அறிந்த நபர் வவுனியாவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதுடன், அவர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர் புலிகள் அமைப்பில் செயற்பட்ட அந்த அமைப்பு புலனாய்வுப்பிரிவின் உறுப்பினர் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது புலிகளின் தலைவர்களது பணம்,தங்கம் உள்ளிட்ட சொத்துக்கள் இந்த கொள்கலன் பெட்டியில் வைக்கப்பட்டு புதைகப்பட்டுள்ளதாக நம்பபடுகிறது.
No comments:
Post a Comment