Saturday, June 9, 2012

தமிழ் நாட்டில் இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்புகள் எமது நாட்டின் இறைமையை மீறும் செயலாகும்-தயாசிறி!

Saturday, June, 09, 2012
இலங்கை::தமிழ் நாட்டில் இலங்கை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்புகள் எமது நாட்டின் இறைமையை மீறும் செயலாகும். இதனை தடுக்க அரசாங்கம் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இலங்கை இந்தியா இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவை இச்சம்பவங்கள் பாதிப்பை ஏற்படுத்தலாமென்று அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ரவி கருணாநாயக்க எம்.பி.யினால் முன் வைக்கப்பட்ட தனி நபர் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனை தெரிவித்தார்.

தமிழ் நாட்டுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் எமது அமைச்சர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிராகவா அல்லது இலங்கையர்களுக்கு எதிராகவா பாரதூரமான பிரச்சினை இரண்டு நாடுகளுக்குப் பிரச்சினைகளை உருவாக்கும்.

எனவே இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

எமது அமைச்சர்கள், பாõளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் சிறப்புரிமைகள் உள்ளவர்கள். எனவே தமிழ் நாட்டில் இடம்பெறும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment