Sunday, June 3, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவா? தலைவர் சம்பந்தன் மறுப்பு!

Sunday 3rd of June 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித் துள்ளார். ஊடகங்க ளில் வெளி யிடப்படும் தகவல்களைப் போன்று கட்சியில் எவ்வித உட்பூசல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி ஓர் ஜனநாயகக் கட்சி என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்கள் ஜனநாயக அடிப்படையில் கருத்துக்களை வெளியிட முடியும் என அவர் தெரிவித் துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

No comments:

Post a Comment