Sunday, June 10, 2012

பிரித்தானியாவில் புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை தொடர்பாக நடவடிக்கை!

Sunday, June, 10, 2012
இலங்கை::பிரித்தானியாவில் புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை தொடர்பாக நடவடிக்கை!

பிரித்தானிய சட்டத்திட்டங்களை மீறி, லண்டனில் புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரித்தானியாவில் உள்ள சிங்கள அமைப்பான இலங்கையர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியா,புலிகளை தடைசெய்துள்ள நிலையில், புலிகளின் கொடியை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

புலிகளின் உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை ஆகிய இந்த சட்டத்தை மீறி புலிகளின் கொடியை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புலிகக் கொடியை ஏந்தியிருந்தவர்கள் தமது முகங்களை மூடிக் கொண்டிருந்தனர் எனவும் திவயின தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹித்ரோ விமான நிலையத்தின் 4 இலக்க கட்டடத்தில், 100க்கும் மேற்பட்ட புலிக்கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்தில் உள்ள சிங்கள அமைப்பின் அதிகாரி, தாம் இது சம்பந்தமாக சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் பிரித்தானிய கொடியுடன் புலிகளின் கொடியை ஏந்தியமை சட்டவிரோதமானது எனவும் இதன் மூலம் பிரித்தானியா பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக காட்ட முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்...

பிரிட்டன் அரசாங்கம் புலிகளை தடை செய்துள்ள நிலையில், அந்த அமைப்பின் கொடிகளை காண்பிக்க அனுமதிக்க முடியாது என பிரிட்டனுக்கான இலங்கைப் பேரவை தெரிவித்துள்ளது.

ஹித்ரூ விமான நிலைய பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சிலர் புலிக்கொடி ஏந்தி பிரசாரம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment