Sunday, June 24, 2012

விண்வெளி நிலையத்துக்கு ஜூலையில் சுனிதா பயணம்!

Sunday, June, 24, 2012
வாஷிங்டன்::அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் சுனிதா வில்லியம்ஸ். வயது 46. விண்வெளி ஆராய்ச்சி வீராங்கனையான அவர், 2006ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டில் சென்று 6 மாதங்கள் தங்கி ஆய்வு நடத்தினார். வெற்றிகரமாக பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இப்போது மீண்டும் விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 3 விஞ்ஞானிகள் குழுவுக்கு சுனிதா தலைமை ஏற்றுள்ளார். அடுத்த மாதம் 2 ஆண் விஞ்ஞானிகளுடன் சுனிதா விண்வெளிக்கு செல்கிறார். கஜகஸ்தானில் உள்ள பைகானுர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்ய விஞ்ஞானி யுரி மலேன்செங்கோ, ஜப்பான் விஞ்ஞானி அகிகிடோவுடன் சுனிதா பயணமாவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நேற்று தெரிவித்தது.

No comments:

Post a Comment