Monday, June 25, 2012இலங்கை::தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசங்களில் பல கொடுமைகளை அனுபவித்து வருவ தாகவும், தமிழர் பிரதேசத்தில் நில ஆக்கிர மிப்பு மற்றும் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்திவரும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அவற்றிற்கு உரிய தீர்வு காண அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மட்டும் தயங்குவது ஏன் எனும் கேள்வி வடக்கு கிழக்கில் வாழும் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் மட்டுமல்லாது சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
அரசாங்கம் தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளதாகவும் தமிழ்க் (புலி)கூட்டமைப்பினர்தான் மறுதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கம் மீது கூட்டமைப்பு தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் எவ்விதமான ஆதாரமுமற்றவை எனினும் கூட்டமைப்பினர் ஏதோ அல்லது எவரதோ தேவையின் அல்லது நிர்ப்பந்தத்தின் மூலமாக இவ்வாறு செயற்பட்டு வருவதாக அரச தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எது எவ்வாறிருப்பினும் நாட்டில் யுத்தம் இல்லாது மக்கள் அமைதியாக வாழும் இன்றைய சூழ்நிலையில் பிரச்சினைகள் ஏதேனும் காணப்படின் அவற்றுக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பதே சிறந்த வழி எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் முப்பது வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் மீண்டும் கலகங்கள் தோன்றி இன்னலுற்றிருக்கும் மக்களது வாழ்வில் மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்று புத்திஜீவிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தமிழ்க் (புலி)கூட்டமைப்பு தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபடுவதே சிறந்த வழி எனவும் கல்விச் சமூகம் சுட்டிக்காட்டி யுள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட மட்டும் தயங்குவது ஏன் எனும் கேள்வி வடக்கு கிழக்கில் வாழும் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் மட்டுமல்லாது சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
அரசாங்கம் தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளதாகவும் தமிழ்க் (புலி)கூட்டமைப்பினர்தான் மறுதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கம் மீது (புலி)கூட்டமைப்பு தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் எவ்விதமான ஆதாரமுமற்றவை எனினும் (புலி)கூட்டமைப்பினர் ஏதோ அல்லது எவரதோ தேவையின் அல்லது நிர்ப்பந்தத்தின் மூலமாக இவ்வாறு செயற்பட்டு வருவதாக அரச தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எது எவ்வாறிருப்பினும் நாட்டில் யுத்தம் இல்லாது மக்கள் அமைதியாக வாழும் இன்றைய சூழ்நிலையில் பிரச்சினைகள் ஏதேனும் காணப்படின் அவற்றுக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பதே சிறந்த வழி எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் முப்பது வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் மீண்டும் கலகங்கள் தோன்றி இன்னலுற்றிருக்கும் மக்களது வாழ்வில் மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்று புத்திஜீவிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தமிழ்க் (புலி)கூட்டமைப்பு தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபடுவதே சிறந்த வழி எனவும் கல்விச் சமூகம் சுட்டிக்காட்டி யுள்ளது.
No comments:
Post a Comment