Sunday, June, 17, 2012இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையைஅமுல்படுத்துமாறு நட்பு நாடுகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளின் போது அமெரிக்க ஆதரவு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத இலங்கையின் நட்பு நாடுகள் இந்தக் கோரிக்கையைவிடுத்துள்ளன.
எதிர்வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குமுன்னர் நாட்டில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்க வேண்டுமாயின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென குறித்த நட்பு நாடுகள்அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
வெறும் நன்மதிப்பு அடிப்படையில் நட்பு நாடுகள்ஒத்துழைப்பு வழங்காது எனவும், யதார்த்தமான தன்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதுஎனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் எவ்வாறான பரிந்துரைகளை அமுல்படுத்தமுடியும் முடியும் மற்றும் அவை எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பன தொடர்பில் அடுத்த மாதமளவில் ஊடகங்களுக்கு தகவல்கள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment