Tuesday, June 12, 2012

குற்றங்கள் அதிகரிக்க இடமளிக்கப்படவில்லை - பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன்!

Tuesday, June, 12, 2012
இலங்கை::சிவில் யுத்தம் இடம்பெற்ற பல நாடுகளில் யுத்தத்தின் பின்னர் குற்றங்கள் அதிகரித்த போதிலும், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்கப்படவில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

சியபத் வில என பெயரிடப்பட்டுள்ள பொதுமக்கள் நட்புறவுடனான பொலிஸ் சேவையை உருவாக்குவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக, மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இன்று நடைபெற்ற செயலமர்வில் அவர் இதனைக் கூறினார்.

யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஏனைய மாகாணங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதால், யுத்தத்தின் பின்னர் ஆயுத பாவனை அதிகரிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஆயினும் தற்போது கொள்ளைச் சம்பவங்கள், கொலைகள் என்பவற்றிற்கு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்தாவிடின் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment