Sunday, June 10, 2012

இலங்கை மீது பிரயோகிக்கப்படும் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் -பாதுகாப்பு செயலாளர் கோட்டஅபய ராஜபக்ச!

Sunday, June, 10, 2012
இலங்கை:: இலங்கை மீது பிரயோகிக்கப்படும் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டஅபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள பௌத்த ஆந்மீக தலங்களை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை எவரினாலும் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்..

மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்ளில் உள்ள அதிக அளவிலான பௌத்த விகாரைகளை தரிசிக்க முடியாத நிலை இருந்தது.

அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாப்பாற்றும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது. அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்களையும் ஒரு சவாலாக நாம் மேற்கொள்வோம்.

குறிப்பாக பௌத்தன் என்ற முறையில் அதனை நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் எம்மால் மேற்கொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்...

பௌத்த தள மேம்பாடு தடுக்க முடியாது:-

நாட்டில் உள்ள பௌத்த ஆந்மீக தலங்களை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை எவரினாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புப்பு செயலாளர் கோட்டஅபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்ளில் உள்ள அதிக அளவிலான பௌத்த விகாரைகளை தரிசிக்க முடியாத நிலை இருந்தது. அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது. இந்த நிலையில் அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாப்பாற்றும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது. அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்களையும் ஒரு சவாலாக நாம் மேற்கொள்வோம். குறிப்பாக பௌத்தன் என்ற முறையில் அதனை நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் எம்மால் மேற்கொள்ள முடியும்...

நாட்டில் குற்றச் செயல்கள் கனிசமான அளவு குறைவடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்!

குற்றச் செயல்கள் தொடர்பில், நாட்டிற்கு எதிராக செயற்படுகின்ற குழுக்கம் ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மாத்தறை வழிபாட்டுத்தலம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கோட்டபாய ராஜபக்ஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பெளத்த சமூகங்களுக்கிடையில் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாக காண்பிக்கப்படுவதனால் நாட்டிற்கு தேவையில்லாத அபகீர்த்தி ஏற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment