Friday, June 22, 2012

வவுனியா செட்டிக்குளம் வாவியொன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி மீட்பு!

Friday, June, 22, 2012
இலங்கை::வவுனியா, செட்டிக்குளம் வாவியொன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கியொன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த பகுதியில் சோதனையிட்ட பொலிஸார் மேற்படி தற்கொலை அங்கியினைக் கண்டெடுத்துள்ளனர்.

புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான சுமார் 7 கிலோ கிராம் நிறையுடைய மேற்படி தற்கொலை அங்கி, சேதமாகாத நிலையில் காணப்பட்டதாகவும் அதனை செயலிழக்கச் செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

No comments:

Post a Comment