Sunday, June 10, 2012

உலகிலேயே குண்டு’ என்று கின்னஸ் சாதனை படைக்க சிப்ஸ், பர்கர், ஆம்லெட்களை வளைத்துக் கட்டும் இளம்பெண்!!!

Sunday, June, 10, 2012
வாஷிங்டன்::உலகிலேயே குண்டு பெண் என்ற சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்க பெண் ஒருவர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார். சாதனை படைக்க பல வழிகள் உண்டு அதில் இதுவும் ஒருவகை என்கிறார் அமெரிக்க இளம்பெண். அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் சுசான் இமான் (33). இவர் உலகின் குண்டு பெண் என்ற சாதனையை படைக்க கடுமையாக போராடி வருகிறார். இதற்காக தான் தினசரி 30,000 கிலோ கலோரிகளை உணவாக எடுத்துக் கொள்கிறார். 1,600 பவுண்டு எடையை எட்டுவதற்கு கண்டதையும் உள்ளே தள்ளி வருகிறார். தற்போது இவரது எடை 520 பவுண்டு உள்ளன. இவரது இந்த சாதனைக்காக இவரது காதலர் பார்க்கர் எப்பொழுதும் உடன் இருந்து தேவையானவற்றை அவ்வப்போது சுடச்சுட சமைத்துக் கொடுத்த வண்ணம் உள்ளார். காலை சிற்றுண்டியில் 12 முட்டைகள் கொண்டு பெரிய ஆம்லெட் ஸ்பெஷலாக செய்து தருகிறார். தவிர கேக், ப்ரெட், சிப்ஸ், பர்கர் உள்ளிட்ட ஹை கலோரி உணவுகள் நிச்சயம் உண்டு.

இதுகுறித்து சுசான் கூறியதாவது: உலகின் குண்டு பெண் என்று கின்னஸ் சாதனை பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதற்காக கடந்த 10 வருடங்களாக முயன்று வருகிறேன். என் முடிவுக்கு என் காதலர் மிகுந்த ஒத்துழைப்பு தருகிறார். விதவிதமான உணவுகளை சுடச்சுட சமைத்து தருகிறார். குண்டானவர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கத்தான் இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். தினமும் 30 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிடுகிறேன். இதற்காக மாதத்துக்கு ஒரு முறை மார்க்கெட் செல்கிறேன். அங்கு எல்லா பொருட்களை எடுத்து பில் போட 8 மணி நேரம் ஆகிறது. 6 டிராலி முழுக்க சாப்பிடும் ஐயிட்டங்கள்தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னை ஆண்கள் பலர் பார்க்கின்றனர். செக்ஸியாக இருப்பதாக நினைக்கிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றை நானே செக்கப் செய்து கொள்கிறேன்.
இவ்வாறு சுசான் கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டர் பிலிட் கூறுகையில், சுசானுக்கு இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை என்கிறார்.

No comments:

Post a Comment