Tuesday, June, 12, 2012சென்னை:: புலிகளுக்கு ஆதரவாக,இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், ம.தி.மு.க., பொதுச் செயலர் (புலி) வைகோ, நேற்று ஆஜரானார். விசாரணை, அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஈழத்தில் நடந்தது என்ன? என்கிற தலைப்பில், (புலி)வைகோ பேசினார். இவரது பேச்சு, இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது எனக் கூறி, (புலி)வைகோவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வைகோ மீது, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. (புலி)வைகோ நேரில் ஆஜரானார். விசாரணையை, அடுத்த மாதம் 10ம் தேதிக்கு, நீதிபதி இளவழகன் தள்ளிவைத்தார். வெளியில் வந்த (புலி)வைகோ கூறும்போது, "இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல், தனி தமிழ் ஈழம் அமைவது பற்றி பேசினேன். அதை, ஒரு போதும் மாற்றிக் கூற மாட்டேன். கோர்ட்டிலும், இதை தெரிவிப்பேன்' என்றார்.
No comments:
Post a Comment