Saturday, June, 09, 2012இலங்கை::தென்மராட்சி பகுதியில் சமூக விரோத குழு ஒன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகர் குகனேஸ்வரன் இன்று தெரிவித்தார்.
சாவச்சேரியில் ஒரே நாளில் மூன்று வீடுகள் ஆயுதமுனையில் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லையென இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கடந்த வாரம் ஹெரோயின் போதை பொருள் தொடர்பிலான குற்றச் செயல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லையென தெரிவித்த யாழ். மாவட்ட சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் குகனேஸ்வரன், 11 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்டும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு வாரகாலப் பகுதியில் யாழ். மாவட்டத்தில் கருக்கலைப்பு, வாள் சண்டை, துவிச்சகரவண்டி களவு, மோட்டார் வண்ணடி களவு, நகைக் கொள்ளை போன்ற 14 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுமதியின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
அவற்றில் காங்கேசன்துறைப் பகுதயில் 12 முறைப்பாடுகளும், தெல்லிப்பளையில் 2 முறைப்பாடுகளும், பருத்தித்துறைப் பகுதயில் 2 முறைப்பாடுகளும், வல்வெட்டித்துறையில் 2 முறைப்பாடுகளும், நெல்லியடியில் 2 முறைப்பாடுகளும், இளவாலையில் 3 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment