Saturday, June 9, 2012

காஷ்மீரில் நிலச்சரிவு: 400 பேர் சிக்கினர் ; சுற்றுலா பயணிகளை மீட்க ராணுவம் தீவிரம்!

Saturday, June, 09, 2012
ஜம்மு::உலகின் மிக உயரமான மோட்டார் வாகனம் செல்லும் வழித்திடமாக விளங்கும் காஷ்மீரில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி சுற்றுலாபயணிகள் வந்து செல்லும் இடம் ஆகும் . வாகனங்களுடன் சிக்கி கொண்ட நபர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரின் கர்துங்லா என்ற பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்கள் பெண்கள், குழந்தைகளே அதிகம் அடங்குவர். பலர் மண்ணில் புதைந்து விட்டதாகவும் தெரிகிறது. இருப்பினும் உயிர்ச்சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை இல்லை.

மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ள பலருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகம்பேர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு தீவீரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment