Monday, June 18, 2012இலங்கை::வலிகாமம் வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கரையோர கிராமங்களை ஜனாதிபியிடம் கதைத்து விடுவிக்கப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
நேற்றைய தினம் அவரை நேரில் சந்தித்த வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களது மீனவ அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களது பிரதிநிதிகள் சிலர் சிறீதர் திரையரங்கினில் அவரை சந்தித்து உரையாடினர்.
குறிப்பாக தமது நிலத்தை படைத்தரப்பு நிரந்தரமாக கையகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரில் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக வடமராட்சியின் குறிப்பிட்ட சில கடற்கரை பகுதிகளினில் உள்ளுர் மீனவர்களுக்கும் இடம்பெயர்ந்த மீனவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதிலும் குறிப்பாக ஈபிடிபியினது ஆதரவாளர்களென தெரிந்தும் சிலர் தாக்கப்பட்டமை தொடர்பிலும் அங்கு பிரஸ்தாபிக்கப்ட்டிருந்தது. இதனால் சீற்றமுற்ற அமைச்சர் சிலர் மீண்டும் மீண்டும் தன்னை சீண்டி பழைய டக்ளஸ் தேவானந்தாவாக்க முற்படுவதாக தெரிவித்தார்.
வழமை போலவே தமது கையை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்ட அமைச்சர் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி வழங்கியுள்ளார்.
தம்மை நிரந்தரமாக மீள் குடியமர உடனடியாக அனுமதிக்காவிட்டால் மீன் பிடிக்க ஏதுவாக தொண்டமனாறு பகுதியினூடாக மயிலிட்டிப்பகுதியை திறந்து விடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment