Wednesday, June 20, 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு!

Wednesday, 20th of June 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலவரங்களை நேரில் கண்டறிந்து கொள்ளுமாறு நவனீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்புகள் பேணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நவனீதம் பிள்ளைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா கிளைக்கான இலங்கை அலுவலகம்இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால்நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது தேவையற்றது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதனையே அரசாங்கம்விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை கிரமமான முறையில்அமுல்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment