Wednesday, June 20, 2012

கேரளாவில் தமிழக அதிகாரிகள் சிறைபிடிப்பு!

Wednesday, 20th of June 2012
திருவனந்தபுரம்::தமிழக பொதுபணித் துறை அதிகாரிகள் கேரளாவில் சிறை பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கும் இடத்தை பார்வையிட சென்ற, தமிழக பொதுபணித் துறை அதிகாரிகளை அங்குள்ள கிராம மக்கள் சிறை பிடித்தனர். தமிழக தலைமை பொறியாளர் ரங்கநாதன் உட்பட, 5 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட தமிழக அதிகாரிகளை, அகழி பகுதி காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment