Tuesday, June, 12, 2012இலங்கை::வடக்கில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும்வலியுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த போது அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரிகிளின்ரனும் இதனை வலியுறுத்தியிருந்தார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்தி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஜனநாயக ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment