Sunday 3rd of June 2012இலங்கை::சில நாடுகள் பல்வேறு உபதேசங்களை செய்கின்ற போதிலும் அவற்றை அந்த நாடுகள் பின்பற்றுவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வல்லரசு, பிராந்திய வல்லரசு மற்றும் பொருளாதார கேந்திர நிலையம் என பல்வேறு பெயர்களில் சில நாடுகள், ஏனைய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதூகக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கௌதம புத்தரின் கொள்கைள் கோட்பாடுகளை நாட்டுத் தலைவர்கள் பின்பற்றினால் தற்போது பல நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிணக்குகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்...
இலங்கை மக்கள் பொறுமையுடன் செயற்பட்டனர் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
பயங்கரவாதிகள் புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தி இனங்களிடையே குழப்பநிலையை ஏற்படுத்த முற்பட்ட சந்தர்ப்பங்களில் இலங்கை மக்கள் பொறுமையுடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொங்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை கூறியுள்ளார்.
புத்தபெருமானின் வழிகாட்டலை அரச தலைவர்கள் பின்பற்றுவார்களாயின், நிகழ்காலத்தில் உலக மக்கள் எதிர்நோக்கியுள்ள உள்ளக மற்றும் சர்வதேச ரீதியான மோதல்கள்களுக்குத் தீர்வுகாண முடியுமெனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புத்தசாசன மேம்பாட்டிற்காக இலங்கையின் அனுசரணையாளரான தாங்லாந்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வரலாற்று சிறப்புமிக்க பொறுப்புக்களையும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
2600ஆவது சம்புத்தத்வ ஜயந்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது ஆண்டு வெசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தாய்லாந்தில் நடைபெற்ற நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஸ இன்று கலந்து கொண்டார்.
உலகின் 58 நாடுகளைச் சேர்ந்த மகாசங்கத்தினர் உட்பட சுமார் இரண்டாயிரத்து 500 பேர் பங்குபற்றிய இந்த நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மகா சங்கத்தினர் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment