Saturday, June 23, 2012

கிளிநொச்சி-திருமுறிகண்டிப் பகுதியில் சுமார் 80 குடும்பங்கள் இன்று சனிக்கிழமை மீள்குடியேற்றப்பட்டனர்!

Saturday, June 23, 2012
இலங்கை::யுத்தத்தின் பின்னர் இதுவரை மீள் குடியேற்றப்படாதிருந்த திருமுறிகண்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று மீள்குடியேற்றப்பட்டனர். கடந்த மூன்று வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நன்பர்கள் வீடுகளிலும் வசித்து வந்த சுமார் 80 வரையானகுடும்பங்கள் இன்று முதற்கட்டமாக இப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டனர்.
இவர்களில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த 47 குடும்பங்களும் உறவினர் நன்பர்கள் வீடுகளில் வசித்து வந்த 33 குடும்பங்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுக்கான காணி ஆவணங்களை வழங்கிய அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இக் குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புக்களை அமைப்பதற்காக 94 இலட்சம்ரூபா நிதியினையும் ஒதுக்கீடு செய்து அதற்கான ஆவணத்தையும் அதிகாரிகளிடம் கையளித்தார். 147 குடும்பங்களை உள்ளடக்கிய திருமுருகண்டி கிராமத்தில் முதற்கட்டமாக 80குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று நன்பகல் 12.30 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக நடைபெற்ற இம்மீள் குடியேற்ற நிகழ்வில் வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி ரட்ணாயக்க ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச வடமாகான ஆளுனர் ஜிஏ சந்திரசிறீ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உணைஸ்பாருக் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் ஒட்டுசுட்டான் உதவி அரச அதிபர் திரேஸ்குமார் திருமுருகண்டி கிராம அலுவலர் குபேந்திரன் இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment