Sunday, June 24, 2012

தேசிய கல்வி மற்றும் தொழில் கண்காட்சி 2012 பாதுகாப்புச் செயலாளரால் அங்குரார்ப்பணம்!

Sunday, June, 24, 2012
இலங்கை::2012 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி மற்றும் தொழில் கண்காட்சியான ‘பியூச்சர் மைன்ட் 2011’ கண்காட்சி பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷ அவர்களால் (ஜூன்-22) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வேதச மண்டத்தில் ஆரம்பமான இக் கண்காட்சியானது, மாணவர்களுக்கு தொழில் வாய்பை தேர்ந்தெடுப்பதற்று வழிகாட்டியாக அமைவதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களை மாணவர்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளகூடிய வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

மேலும் இக் கண்காட்சியானது, பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்கால உயர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு தொடர்பான தகவல்களையும் பெறக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 175க்கும் மேற்பட்ட கல்வி வழங்குனர்கள் இதில் பங்கேற்றிருள்ளனர்.

மேலும் இக் கண்காட்சியை, மாணவர்களது நலன்கருதி கண்டி மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலும் நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற சிங்களம் மற்றும் ஆங்கில கட்டுரைப் போட்டி மற்றும் வரைதல் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை பாதுகாப்புச் செயலாளரால் அவர்கள் வழங்கிவைத்தார்.

இங்கு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், உள்நாட்டு பல்கலைகழகங்களில் வாய்ப்புக்களை பெற தவறியவர்கள் அதனை தமது கல்விக்கு ஒரு தடையாக அமைத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் உயர் கல்விக்கான பல சிறந்த வாய்ப்புக்கள் உள்ளன. அதனை மாணவர்கள் சிறந்தமுறையில் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களதும் எதிர்கால இலக்கு நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதாக அமைய வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

இந் நிகழ்வில் ரனவிரு(போர்வீரர்) பாடசாலைக்கென நன்கொடையொன்று டிபக் கணணி நிறுவனத்தால் பாதுகாப்புச் செயலாளரிடம் வழங்கிவைக்கப்பட்டது. இதைத்தவிர போர்வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசிகளும் பல நிறுவனங்களால் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவுக்கான தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, பிரதிச் சபாநாயகர் சந்திமா வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழகத்தின் உபவேந்தர், நாலந்த கல்லூரி அதிபர் உட்பட பல அதிதிகள் இதில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இக் கண்காட்சியானது பொதுமக்களுக்காக ஜூன் 22 முதல் இன்று(24) வரை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment