Thursday, June, 14, 2012இலங்கை::2006ம் ஆண்டு ஓகஸ்ட் 14ம் திகதி கொள்ளுபிட்டியில் முன்னாள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசிர் அலி மொஹமட்டை கொலை செய்ய முயற்சித்தமை, 4 சிப்பாய்கள் 4 பொது மக்களை உயிரிழக்கச் செய்தமை தொடர்பில் புலி சந்தேகநபர்கள் மூவர் மீது சட்ட மா அதிபர் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளார்.
குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் தற்போது சிறையில் உள்ள நிலையில் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் சந்தேகநபர்களிடம் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளுமாறு மேல் நீதிமன்ற காலவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
3 பகுதி வழக்கும் 28 சாட்சியாளர்கள் கொண்ட அறிக்கையும் சட்ட மா அதிபரால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment