Tuesday, June 12, 2012

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 11 பேர் கைது!

Tuesday, June, 12, 2012
இலங்கை::கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாராகவிருந்த 11 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய புத்தளம் பகுதியிலுள்ள தங்குமிடமொன்றை சுற்றிவளைத்தபோதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஒன்பது பேர் மட்டக்களப்பு பகுதியையும், இரண்டு பேர் முல்லைத்தீவு பகுதியையும் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்களை அந்த இடத்திற்கு அழைத்துவந்ததாக கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடல் மார்க்கமாக படகின் மூலம் இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒருசிலரிடம் இரண்டு இலட்சம் ரூபா வரை பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment