Sunday, May, 20, 2012இலங்கை::நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுமானால், அரசியல் தீர்வுக்கான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கமும், ஐக்கி தேசியக் கட்சியும் கடந்த வாரம் சந்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு உரிய நிகழ்ச்சி நிரலின் கீழ் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், சிறிய திருத்தங்களுக்காக அந்த நிகழ்ச்சி நிரல் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசாங்கத்தின் பதில் கிடைத்த பின்னர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்த தமது நிலைப்பாடுகள் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்திற்கு அறிவிக்க உள்ளன.
அதேவேளை ஜே.வி.பியை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஜே.வி.பியையும் கலந்து கொள்ள செய்வதற்காக மேற்படி நிகழ்ச்சி நிரல் தொடர்பில், அந்த கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
No comments:
Post a Comment