Tuesday, May 22, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் திட்டம் ஏதும் கிடையாது - சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

Tuesday, May, 22, 2012
இலங்கை::கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே அந்தக் கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி அதனை மறுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது தொடர்பான எந்த திட்டமும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடையாது என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கண்டியில் வரும் 27ஆம் திகதி நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும், கிராமிய குழு உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

No comments:

Post a Comment