Monday, ,May, 28, 2012இலங்கை::தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
குறித்த இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் இந்த கடிதத்தை கையளித்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் பிரதிநிதிகள் குழுவை இலங்கையினுள் அனுமதிக்க கூடாது என கோரியுள்ளனர்.
இதற்குமுன்னரும், சூடானில் யுத்தகுற்றச்சாட்டு தொடர்பில் அறிக்கையிடுவதற்கு இவ்வாறான நிபுணர் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக குழுவினர் செயற்பட்டதாகவும், அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், மனிதவுரிமைகள் ஆணையாளரின் குழுவினரை இலங்கையினுள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும், தேசிய பற்றுள்ள தேசிய இயக்கம் கோரியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபை பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வரவேண்டுமாயின் அரசாங்கத்தின் அனுமதியை பெற்ற பின்னர் மாத்திரமே வரமுடியும் என வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் கருணாதிலக்க அமுனுகம எமது செய்திச் சேவைக்குத் தகவல் தருகையில், மனிதவுரிமைகள் ஆணையகம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய யோசனையில் உள்ள விடயங்களை அரசாங்கத்தின் இணக்கப்பாடின்றி நடைமுறைப்படுத்த முடியாது என குறிப்பிட்டார்.
அதேவேளை, மனிதவுரிமைகள் ஆணையாளரின் பிரதிநிதிகளை இலங்கைக்குள் ஏற்பதா இல்லையா என்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தை நிலைகுழைய செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என மின்சக்தித்துறை அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment