Monday, ,May, 28, 2012மண்டபம்::ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கேம்ப்பில், இலங்கை அகதி அகதி கொலை:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கேம்ப்பில், இலங்கை அகதி ஜெகன், 18, கொலை செய்யப்பட்டார்.இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன், கடந்த 2008 முதல், மண்டபம் அகதிகள் முகாமில், பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று வீடு அருகில் உள்ள ஆள் இல்லாத அறையில் தூங்கினார்.
அதிகாலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது பிணமாக கிடந்தார். கைகள் மடக்கப்பட்ட நிலையில், வலது தொடை, ஆண் உறுப்பு அருகில் பாட்டிலால் கீறப்பட்ட காயங்கள் இருந்தன. மண்டபம் போலீசாரின் விசாரணையில், இவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment