Thursday, May 17, 2012ஆர். எஸ்., மங்கலம்::ராமநாதபுரம், திருப்பாலைக்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காசீம் மகன் ரசூல்கான்,38. இவர் இலங்கையை சேர்ந்தவர். கடந்த 1998ல் விருதுநகர் மாவட்டம் குள்ளூர் சந்தை அகதிகள் முகாமில் வசித்தார். பின் 1992ல் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை முகாமிற்கு மாற்றப்பட்டார். ராமநாதபுரம், திருப்பாலைக்குடி முகாமில், அகதியாக பதிவு செய்து தங்கினார்.
இவரது பெரியப்பா மகன் இக்பால் சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்தார். இக்பால் பெயரில் போலியாக ரசூல்கான் பாஸ்போர்ட் எடுத்து அடிக்கடி துபாய் சென்று வந்தார். இது குறித்து ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கென்னடி, போலி பாஸ்போர்ட்டில் துபாய் சென்று வந்த ரசூல்கானை கைது செய்தனர். அவரது போலி பாஸ்போர்ட் , முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment